ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு

0 551

ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை வைக்க தி.மு.க.வினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அந்த இடத்தில் ஜெயலலிதா சிலை வைப்பதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.கவினர் மேற்கொண்டபோது, அங்கு கருணாநிதி சிலையுடன் வந்த திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து தி.மு.கவினர் கலைந்து சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அங்கு ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டது.

கருணாநிதி சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக அணுக உள்ளதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments