பாடகர் மிகா சிங்கை புறக்கணிக்க பாலிவுட் கலைஞர்கள் முடிவு

0 363

இந்திய திரைப்படங்களில் பிரபல பின்னணி பாடகர் மிகா சிங் பணியாற்றக்கூடாது என்றும் அவர் இடம்பெறும் படங்களில் பணியாற்ற மாட்டோம் என்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

பாலிவுட் பாடகரான மிகா சிங், கராச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 8ம் தேதி பங்கேற்றார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உறவினர் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் மிகா சிங் பங்கேற்றதால் பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்படும் மிகா சிங்கை சட்டப்படி தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments