குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள்

0 226

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து  தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டி வருகின்றது. குற்றாலம் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள்  கூட்டம்  அலைமோதி வருவதால்  நீண்டவரிசையில் காத்திருக்கும்  பெண்கள் குழுவாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக அங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகளவில் உள்ளது. சீசன் களை கட்டியுள்ளதால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி உருவாகியுள்ளதோடு, இங்குள்ள அனைத்து விடுதிகளிலும் தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments