சாலையோரத்தில் காலாவதி தேதியுடன் கொட்டி கிடந்த அரசு மருத்துவமனை மாத்திரைகள்

0 258

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலை ஓரத்தில் அரசு மருத்துவமனை மாத்திரைகள் கொட்டப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள நேசனல் பள்ளி அருகே இருக்கும் நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து கருப்பராயன் குட்டைப்பகுதிக்கு செல்லும் வழியில் அக்சயா கார்டன் என்ற இடத்தில் மருந்து, மாத்திரைகள்,மருந்து பாட்டில்கள் குவியல் குவியலாக கொட்டிக் கிடந்தன.

இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழக அரசு வழங்கக் கூடிய மருந்து மாத்திரைகள் ஆகும்.

மேலும் இவை வருகிற 2020 ஆம் ஆண்டு வரை காலாவதி கெடு இருக்கக்கூடிய மருந்து மாத்திரைகள் ஆகும். ஒருபுறம் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு காரணமாக மருந்துகள் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், இந்த மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

இதுகுறித்து வழக்கறிஞர் ரஹ்மான் என்பவர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments