நடிகரை காரில் விரட்டி தாக்குதலில் ஈடுபட்ட பைக்கர்கள்

0 552

பெங்களூரில் கன்னட நடிகர் கோமல்குமாரை விரட்டி விரட்டி தாக்கியதாக பைக் வீரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காயம் அடைந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லேஸ்வரம் பகுதியில் கோமல்குமார் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்த நான்கு பேர் ஸ்ரீராம் ரயில்வே சுரங்கப்பாலத்தின் ஆளில்லாத பகுதயில் காரை மடக்கி நிறுத்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்நிலையம் அருகிலேயே இச்சம்பவம் நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோமலின் சகோதரரான நடிகர் ஜக்கேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பைக்கில் விரட்டியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments