அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்

0 829

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த்  தரிசனம் செய்தார்.

நள்ளிரவில் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர். பின்னர் மனைவி லதாவுடன் அத்திவரதரை ரஜினி தரிசித்தார். அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ரஜினியின் வருகையை ஒட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments