ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்?

0 252

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. யூனியன் பிரதேசங்களாக பிரியும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

தேர்தலை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேர்தலை நடத்தக்கூடிய நிலை ஏற்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கருதப்படுகிறது. புதிய சட்டமன்றத்திற்கு 114 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். அதில் 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு ஒதுக்கப்பட வேண்டும் .

எனவே 90 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். முந்தைய சட்டமன்றம் 111 இடங்களுடன் இருந்தது. அதே அளவு பலத்தை சட்டமன்றம் பெற வேண்டுமானால் கூடுதலாக ஏழு தொகுதிகள் சேர்க்கப்பட வேண்டும். இப்பிரச்சினை குறித்தும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments