இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையே 3வது ஒருநாள் போட்டி

0 335

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில், முதலாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியில் கேப்டன் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோர் ரன் குவிக்க வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. தோற்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும் என்பதால், தொடரை சமன் செய்ய அந்த அணி கடுமையாகப் போராட வாய்ப்புள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளதால் தொடரை வெல்ல முடியும் என்று இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments