விநாயகர் சிலை செய்யும் தொழில் பாதிக்கப்படும் சூழல்

0 373

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் குறுமணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சிலை செய்யும் தொழில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மானாமதுரையில் மண்ணால் உருவாக்கப்படும் விநாயகர் சிலையை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இச்சிலையை செய்வதற்கு வைகை ஆற்றில் எடுக்கப்படும் குறுமணல் முக்கிய மூலப் பொருளாக விளங்கி வருகிறது. அதனை தற்போது மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதனால் சிலைகளை செய்ய முடியாத நிலை உருவாகி இருப்பதால் தங்களது தொழில் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே முன்பை போல தலை சுமை அளவிற்காவது வைகை ஆற்றில் இருந்து குறுமணலை எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments