நில ஆக்கிரமிப்பு : பொதுப்பணித்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

0 348

மதுரையில், கண்மாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ஓட்டலை அகற்றக் கோரிய வழக்கில், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பொன்னமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே, அரசு கண்மாய் நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் 15 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஓட்டல் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பு என தாசில்தார் அளித்த அறிக்கையின் பேரில், ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு வந்தபோதும், கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்பதால் பொதுப்பணித்துறைதான் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என ஆணையர் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், ஹோட்டல் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments