சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 282

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதார துறை செயலாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில், 7 ஆயிரத்து 243 செவிலியர்கள், 7 ஆயிரம் ரூபாய் என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்திற்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், செவிலியர்களுடன் 6 மாதங்களில்  பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க, சுகாதார துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இக்குழுவிடம், கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டீ.ஆஷா அமர்வு, சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments