குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

0 303

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கலாக வருவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments