அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்

0 628

நாட்டின் 7 முக்கிய நகரங்களில், ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான, 220 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டங்கள் நின்றுபோயிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

அனராக்((Anarock)) என்ற கட்டுமான மேலாண்மை ஆய்வு நிறுவனம், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான திட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில், ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 74 ஆயிரம் வீடுகளின் கட்டுமான பணிகளே முன்னெடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை, அனைத்தும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், தொடங்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுமான பணிகளே தொடங்கப்படாத சூழலில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் வீடுகள் விற்பனையாகிவிட்டதாகவும், கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, எவ்வித கட்டுமானங்கள் இன்றி, வெறும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் நம்பி முதலீடு செய்யப்பட்டிருக்கும் மதிப்பு, ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றிற்கு பிறகு, ரொக்க பரிவர்த்தனை உள்ளிட்டவை முற்றாக குறைந்ததால், 220 அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல், தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புனே நகரங்கள், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சென்னையில், 100 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில், 4 ஆயிரத்து 150 வீடுகள் கட்டுமான பணிகள், 2014ல் தொடங்கிய நிலையில், தொடர்ந்து தாமதமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments