காவிரி வெள்ள பாதுகாப்பு - சுற்றறிக்கை

0 402

கர்நாடக அணைகளில் இருந்தும் அதைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

காவிரியில் தண்ணீர் வரத்து மாறுபாடுகளுக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு மாறுபடும் என்பதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திறந்துவிடுப்படும் தண்ணீர் குறித்து நேரத்துக்கு நேரம் மக்களுக்கு விளம்பரப்படுத்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் திறந்து விடும் காலத்தில் காவிரி மற்றும் கிளை ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் குளித்தல், நீச்சலடித்தல், மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என மக்களை அறிவுறுத்தவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதோடு பெற்றொரிடம் நேரடியாக அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறந்துவிடப்படும் காலத்தில் ஆறுகளின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என விவசாயிகளை அறிவுறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி, பவானி, அமராவதி உள்ளிட்ட ஆற்றகரையோரங்களிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி நெடுகிலும் உள்ளூர் மீட்பு குழு, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவாரண மையங்களில் போதுமான தண்ணீர், உணவு மருத்துவ உதவிகளை உறுதி செய்தல்  108 ஆம்புலன்ஸ்களும், நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் அளிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22,292 கன அடி தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2349 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை வினாடிக்கு 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு
75 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. அதே போன்று ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம்
105.64 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பானசத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments