மதுரை மாவட்டத்தில் ரூ. 31 கோடி செலவில் நீர்நிலைகள் தூர்வாரப்படவுள்ளன

0 236

மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

உசிலம்பட்டி அருகேயுள்ள மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கண்மாயை தூர்வாரும் பணியை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில் 1576 ஊரணிகள் மற்றும் 318 கண்மாய்கள் உள்ளிட்டவை தூர்வாரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments