நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த வழக்கு முடித்து வைப்பு

0 341

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எந்த காரணங்களும் தெரிவிக்காமல், மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளதாகவும், அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும் படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25ம் தேதி முதல் கடந்த மே 5 ம் தேதி வரை 11 கடிதங்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருப்தால், மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால், தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments