தங்க விலை அதிகரிக்க காரணம் என்ன? தற்போது தங்கம் வாங்கலாமா?

0 1079

தொடர்ந்து உயரும் தங்கம்..!

ங்கம் விலை கடந்த சில நாட்களாக நினைத்த பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது ..
மக்கள் அனைவருக்கும் எழும் சந்தேகம்.. தீடீரென தங்கம் விலை உயர காரணம் என்ன ? விலை குறைய வாய்ப்பு ஏதும் இருக்கிறதா ? இப்பொழுது தங்கம் வாங்கினால் லாபமா என்பதெல்லாம் தான்...

image

இந்தியாவில் சேமிப்பு முறைகளில் முதன்மையாக கருத படுவது தங்கத்தில் தான் ....பெருவாரியான முதலீடுகள் தங்க நகைகள் மீது செய்யப்படுகிறது அப்படி இருக்கையில் தங்க விலை திடீரென கிடு கிடு உயர்வுக்கு காரணம் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதே ஆகும் 

image

சர்வதேச பொருளாதார நிலை

சர்வதேச பொருளாதார மந்த நிலையே இதற்கு காரணம் அமெரிக்கா சீனா இடையேயான வரி விதிப்பு.. வர்த்தக போராக மாறி உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையேயான போர் பதற்றம்.. போன்றவற்றினால் சர்வதேச நிலையில் அமெரிக்க டாலர் மதிப்பும் குறைத்து கொண்டு இருக்கிறது..

ஆகையால் பொருளாதார  பாதுகாப்பு கருதி பல்வேறு நாடுகளில் உள்ள அரசு வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர் ...தற்போது நிலையை பார்த்தால் மேலும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தங்க விற்பனையாளர்கள்  தெரிவிக்கின்றனர்..

image

சாமானிய மக்களின் கவலை 

தங்கத்தின் விலை உயரும்போது சாமானிய மக்களிடையே கவலை அதிகரிக்கிறது பெண்ணின் திருமணம் ,மற்றும் வேறு நல்ல காரியங்களுக்கு நகை எடுப்பது போன்றவை இவையெல்லாம் மக்களின் மனதில் பதற்றத்தை உண்டாக்குகிறது..

சரி இப்பொழுது தங்கம் வாங்கினால் பிற்காலத்துக்கு லாபம் ஈட்டலாம் என்றால்..
இதே போன்று 5 ஆண்டிற்கு முன்பு தங்க விலை ரூ.30,000 தாண்டியது ஆனால் அவை நீடிக்கவில்லை ...

அதே போன்று பொருளாதார நிலை சரி செய்யப்பட்டால் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் 

மேலும் அவசர தேவைக்கு மட்டும் தங்கம் வாங்குவது நல்லது ..முதலீடு செய்ய விரும்புவோர் சர்வதேச நிலையை நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நிலைப்பாடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments