காமன்வெல்த் போட்டித் தொடரில் கிரிக்கெட் போட்டி இணைப்பு..!

0 406

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டும் இணைக்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்துவந்தது. இந்நிலையில் காமன்வெல்த்தில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளன.

அந்த வகையில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகள் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டிற்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments