கேரள மாநிலத்தில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சார்பில் பொருட்கள் வழங்க ஏற்பாடு

0 220

கேரள மாநிலத்தில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நடவடிக்கை எடுக்குமாறு திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது  என்றார். இந்த கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தலைமை கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநில  திமுக பிரதிநிதிகள் மூலம் இந்த நிவாரண பொருட்கள் உரியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார். கோவை வரை சென்ற முதலமைச்சர், நீலகிரி மாவட்டத்திற்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை ஏன் சந்திக்கவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments