சிக்கிம் மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்

0 302

சிக்கிம் மாநிலத்தில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

32 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சிக்கிமில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிக்கிம் க்ராந்திகரி மோர்ச்சா கட்சி ஆளும் கட்சியாக விளங்கிவரும் நிலையில் 15 தொகுதிகளில் வென்ற சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களைச் சந்தித்த அவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கமுடியாத ஒரே வடகிழக்கு மாநிலமாக சிக்கிம் விளங்கிவரும் நிலையில், இந்த 10 எம்.எல்.ஏக்களின் இணைப்பானது பாஜகவின் இருப்பை அம்மாநிலத்தில் வலுவுறச்செய்யும் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments