குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம்

0 368

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா 2019ல், இருசக்கரவாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகளும் இணைக்கப்பட்டன.  அதில் குழந்தைகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டப்பிரிவு 129ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இருசக்கரவாகனங்களை ஓட்டிச் செல்லும், பயணிக்கும் அல்லது அழைத்து செல்லப்படும் 4வயது மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதனால் மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளும் மோட்டார் வாகனங்களில் பயணிக்க வேண்டுமானால் தலைக்கவசம் அணிய வேண்டும்.

தற்போது மிதிவண்டிகளில் பயணிக்கும் குழந்தைகளுக்கான தலைக்கவசங்களே சந்தைகளில் கிடைக்கும் நிலையில், இந்த புதிய விதிகளால், குழந்தைகளுக்கான மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் தலைக்கவசங்கள் சந்தைகளை நிரைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கான தலைக்கவசங்களை கொண்டு செல்ல வேண்டிய சூழலும் ஏற்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments