அமித்ஷா என்றால் சும்மாவா? ரஜினிகாந்த் புகழாரம்

0 1558

சென்னையில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்றார். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட தம்மை அவர் நினைவு வைத்திருப்பதாக கூறிய ரஜினி, வெங்கய்யா நாயுடு சிறந்த ஆன்மிகவாதி என்றார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரஜினி காந்த், காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என்றும் அப்போது நாடாளுமன்றத்தில் அமித்ஷா ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார்.

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என்ற ரஜினிகாந்த், யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments