கீர்த்திக்கு தேசிய விருதா ? மம்முட்டி ரசிகர்கள் ஆவேசம்

0 809

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக மம்முட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்த நிலையில் தேசிய விருது குழு தலைவரிடம் மம்முட்டி மன்னிப்பு கேட்டுள்ளார்

தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மற்றும் மலையாள திரை உலகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. சிறந்த மாநில மொழி படத்துக்கான ஒற்றை விருதை மட்டும் கொடுத்து விட்டு தேசிய விருது தேர்வு குழுவினர் ஏமாற்றி உள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

நடிகை கீர்த்திசுரேசுக்கு தேசிய விருது...! என்பதை கேள்வி பட்டதும் இயக்குனர் அட்லி உடனடியாக வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் , சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ் வெளியிடுவதையே தொழிலாக செய்து வந்த பலரால் இதனை தாங்கி கொள்ள இயலவில்லை..!

கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது வழங்கப்பட்டதில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், கீர்த்தியின் தந்தை கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பில் இருப்பதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி மம்முட்டி ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தனர்.

மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு திரைப்படம் விருதுக்கான முழு தகுதிகள் இருந்தும் திட்டமிட்டே விருது குழுவினரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் கருத்து வெளியானது. மம்முட்டி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாகவும் சிலர் கருத்து பதிவிட்டிருந்தால் அதிர்ந்து போன மம்முட்டி ரசிகர்களின் செயலுக்காக தேசிய விருது தேர்வு குழு தலைவரிடம் டிவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதே போல வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயி கணவர் ராகுலுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழில் மேற்கு தொடர்ச்சி மலை, 96, பரியேறும் பெருமாள் போன்ற பல நல்ல படங்களுக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எதிர்ப்பு அரசியல் பேசும் அந்த படங்களின் இயக்குனர் மற்றும் நாயகர்களை பழிவாங்கும் விதமாக, தேசிய விருது தேர்வு குழுவினரால் அவை நிராகரிக்கப்பட்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அம்புகளாக பாய்ந்த வண்ணம் உள்ளது.

சினிமாவில் அரசியல் கலப்பின்றி விருதுகள் வழங்கப்பட்டால் மட்டுமே பல நல்லப்படங்கள்  திரைக்கு வரும், இல்லையெனில் வழக்கம் போல தங்கள் கல்லாவை நிரப்ப ரசிகர்களின் புத்தியை மழுங்கடிக்கும் மசாலா படங்களை தயாரிக்கவே தயாரிப்பாளர்கள் விரும்பும் நிலை உருவாகும் என்கின்றனர் திரைஉலக பிரபலங்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments