சிங்கம், புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர்..

0 710

ண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்துள்ள 3 சிங்கக் குட்டிகளுக்கும், 4 புலிக்குட்டிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஒரு ஆண் மற்றும் இரு பெண் சிங்கக் குட்டிகள் புதிதாகப் பிறந்துள்ளன. அதேபோல் இரு ஜோடி புலிகளுக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் புலிக் குட்டிகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பெயர் சூட்டினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆண் சிங்கக் குட்டிக்கு, பிரதீப் என்றும், இரு பெண் சிங்கக் குட்டிகளுக்கு தஷ்னா, நிரஞ்சனா என்றும் பெயர் சூட்டினார்.

அதேபோல் இரு பெண் புலிக்குட்டிகளுக்கு வெண்மதி, யுகா என்றும், 2 ஆண் குட்டிகளுக்கு மித்ரன், ரித்விக் என்றும் முதலமைச்சர் பெயர் சூட்டினார். புலிக்குட்டிகளுக்கு முதலமைச்சர் பெயர் சூட்டியது இதுவே முதல்முறை. இதை அடுத்து காண்டாமிருக இருப்பிடத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் திறந்து வைத்தார். 

ஐதராபாத் நேரு பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஆண் காண்டாமிருகத்திற்கு ராமு என்று அவர் பெயர் சூட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சஞ்சய் காந்தி பூங்காவில் இருந்து பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

வேலூர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய போது, அங்கு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று இருப்பதாகவும், எனவே இது மிகப்பெரிய வெற்றி என்றும் கூறினார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்றும், அதில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.

இதை அடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடன் பேட்டரி வாகனத்தில் சென்று உயிரினங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். ஒரு குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்ட அவர், பின்னர் பள்ளி மாணவ - மாணவியர், பெண்கள் உள்ளிட்டோருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments