விஜயலட்சுமியை காப்பாற்றிய ரஜினி..! யாருக்கு செக் வைக்கிறார் ?

0 1443

சூர்யா ஜோடியாக பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலெட்சுமி கடுமையான நெருக்கடியில் இருப்பதாக கூறி ரஜினியிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை தொலை பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் தன்னம்பிக்கை அளித்து காப்பாற்றி விட்டதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரண்ட்ஸ் திரை படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை விஜயலெட்சுமி. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை அபகரித்துக் கொண்டு விஜயலெட்சுமியை அவரது குடும்பத்தினர் கைவிட்டதால் அவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சில பிரபலங்கள் மீது புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் தான் மிகவும் நெருக்கடியான நிலையில் தவிப்பதாகவும், தனக்கு நடிகர் ரஜினியால் மட்டுமே உதவ முடியும் என்றும் இந்த வீடியோவை அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது கோரிக்கை வீடியோ வாயிலாக நடிகர் ரஜினிகாந்தை சென்றடைந்ததாக கூறப்படுகின்றது. அவர் விஜலெட்சுமிக்கு நம்பிக்கை தருகின்ற வகையில் பேசி ஆறுதல் கூறியதாகவும், ரஜினியின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனதாகவும், அவரை தலைவராக மதிப்பதாகவும் கூறி புதிய வீடியோ ஒன்றை விஜயலெட்சுமி வெளியிட்டுள்ளார்.

ரஜினி, தன்னை புகழ்வோரையும் தன் மீது விமர்சனம் வைப்போரையும் எப்போதும் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற பரவலாக கூறப்படும் நிலையில் மார்க்கெட் இழந்து கஷ்டத்தில் தவிக்கும் நடிகை விஜயலெட்சுமியை தொடர்பு கொண்டு பேசி இருப்பது மனிதாபிமான உதவியாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் யாரோ சிலருக்கு செக் வைப்பதற்கான உத்தி ஒன்று இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ரஜினியிடம் பேசிய பின்னர் நடிகை விஜயலெட்சுமி மிகவும் தெம்பாக காணப்படுவதால் அவரிடம் வரவு செலவு வைத்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பாதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments