இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் உரை

0 735

பிரதமர் நரேந்திரமோடி, இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார். 

சிறப்பு ஒலிபரப்பு மூலம் பிரதமர் மோடி வானொலியில் உரையாட உள்ளதாக ஆல் இந்தியா ரேடியோ முதலில் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்தது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக மோடி பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்றைய உரையில் விளக்கம் அளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ள ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மோடியின் இன்றைய உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments