சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது..!

0 650

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் மாநாடு. சென்னை 600028, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்ததை அடுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிம்பு உடனான அன்பும் நட்பும் தொடரும் என்றும் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படத்தை தொடங்க இயலவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments