தங்கம் விலை உயர்வு

0 2008

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது.காலையில் சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை, 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனையானது. இதனிடையே பிற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனாலும் நேற்றைய விலையை விட இந்த விலை 88 ரூபாய் அதிகமாகும்.

அதேபோல் காலையில் 21 ரூபாய் உயர்ந்திருந்த ஒரு கிராம் ஆபரணத்தங்கம், பிற்பகலில் 10 ரூபாய் குறைந்து 558 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலையும் நேற்றைய விலையை விட 11 ரூபாய் அதிகமாகும்.

காலையில் கிராமுக்கு 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்திருந்த வெள்ளி விலையும் பிற்பகலில், 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது. இதுவும் நேற்றைய விலையிலிருந்து 80 காசுகள் அதிகமாகும். பார் வெள்ளி ஒரு கிலோ 800 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு கிலோ பார் வெள்ளி 47 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments