தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவு

0 7040

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மணிகண்டன் இதுவரை வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத்துறை , வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆர். பி. உதயகுமார் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து விமர்சித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments