இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக யாரை பார்க்கிறார் கோலி ?

0 967

ரிஷப் பந்த்தை அணியின் எதிர்காலமாக பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றி உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3ஆவது போட்டியில் 42 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில்ரிஷப் பந்த்தை அணியின் எதிர்காலமாக பார்க்கிறோம் என்றும் நிறைய திறன்களையும், நிறைய திறமைகளையும் கொண்டவர் ரிஷப் பந்த் என்றும் கோலி கூறினார்.

மேலும், ரிஷப் பந்துக்கு களத்தில் நெருக்கடி கொடுக்காமல் அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த போதிய சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும் கோலி தெரிவித்தார்.

தற்போது போல தொடர்ந்து விளையாடினால் நிச்சயமாக இந்திய அணிக்கு வெற்றிகளை குவிக்கும் வீரராக ரிஷப் பந்த் நிச்சயம் ஜொலிப்பார் என்றும் கோலி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments