தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டீஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் ரத்து

0 390

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டனிலிருந்து குறுகிய தூர பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் சேவையை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.

இங்கிலாந்தில் கோடை விடுமுறையை ஒட்டி லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல, மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் குறுகிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பலர் இன்று ஹீத்ரோ, காட்விக் மற்றும் லண்டன் விமான நிலையங்களுக்கு வந்தனர்.

ஆனால் தொழிலநுட்ப கோளாறு காரணமாக கணினிகள் முறையாக இயங்காததால் பயணிகள் நீண்ட வரிசையில் மணிகணக்கில் காத்திருக்க நேர்ந்தது.

விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையிலும் தாமதம் ஏற்படவே, 3 மணி நேரம் வரை பயணிக்கும் குறுகிய தூர விமானங்களின் சேவையை நிறுவனம் ரத்து செய்தது. இதனிடையே, சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மற்றொரு தினத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments