சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

0 169

சுதந்திர தினம் நெருங்குவதை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு வாரத்தில் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையுடன் இணைந்து மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

image

பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு விமான நிலைய வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. வாகன நிறுத்துமிடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments