சிகரெட் மீதான ஆர்வத்தால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு..!

0 408

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சிகரெட் பற்றவைத்த போது, அவரது ஆடையில், தீக்குச்சி விழுந்து தீப்பற்றி எரிந்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் 67 வயதான ஆட்டோ ஓட்டுநர் சையத் யூசூப். கடந்த ஒன்றாம் தேதி திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை தாவுலத்தான் தெருவில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.

அங்கு தனது நண்பர் கோபியை சந்திப்பதற்காக காத்திருந்தார். அப்போது, டீ சொல்லிவிட்டு, சிகரெட் பிடிக்க, தீக்குச்சியை பற்ற வைத்தபோது, அந்த தீக்குச்சி எதிர்பாராதவிதமாக அவரது லுங்கியில் விழுந்துள்ளது.

அப்போது மது அருந்தியிருந்தால் லுங்கியில் தீப்பற்றியதை கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இடுப்பு கீழ் உள்ள பகுதியில் தீப்பற்றியதால் காயம் ஏற்பட்டு துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சையத் யூசூப் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தனது ஆடையில் தீப்பற்றியதை அறியாத அளவிற்கு, போதையும், சிகரெட் மீதான விருப்பமும் கண்ணை மறைத்த நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் உயிர் பறிபோயிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments