வெள்ள நீர் நிரம்பி ஓடும் ஆற்றுப் பாலத்தில் மக்கள் பயணம்

0 359

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெள்ள நீர் நிரம்பி ஓடும் ஆற்றுப் பாலத்தின் மீது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கனமழையை அடுத்து மத்தியப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படடுள்ளது. டின்டோரி என்ற இடத்தில் ஆற்றுப் பாலம் ஒன்று உள்ளது.

அங்கு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் பாலத்தின் மீதும் ஏறிப் பாய்கிறது. இந்நிலையில், பாதசாரிகளும், வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உடமைகள், குழந்தைகளோடு உயிர்பயத்துடன் கடந்து செல்கின்றனர். அத்துடன் பின்னால் வரும் வாகனங்கள் மோதாமல் இருக்க வேண்டும் என்ற அச்சத்துடனேயே விலகிச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments