நேற்று ஒரே நாளில் 2.50 லட்சம் பக்தர்கள் அத்திவரதர் தரிசனம்

0 731

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 36 வது நாளான இன்று, ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில் காட்சி அளித்துவருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகிறார்கள்.

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும பக்தர்கள் தரிசனம் தொடங்கியது. நின்ற நிலையில் அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வாகன நெரிசலை தவிர்க்க, இன்று முதல் வெளியூர் வாகனங்கள் நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு எல்லையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் அங்கிருத்து, 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அத்திவரதரரை தரித்து வருகிறார்கள்.

அண்ணா தெருவில் கூடாரம் அமைத்து 30 ஆயிரம் பக்தர்களையும், கோவில் உள்பிரகாரத்தில் 50 ஆயிரம் பேரையும் வரிசைப்படுத்தி, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் நெரிசலின்றி விரைவாக தரிசனம் நடைபெறுகிறது.

ஆங்காங்கே பக்தர்களுக்கு உணவு, குடிநீரும், குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் போன்றவையும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வருகையைப்பொறுத்து நள்ளிரவு வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 35 நாட்களில் 55 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதுடன், நேற்றைய தினம் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments