எரிபொருள் கடத்திச் சென்றதாகக் கூறி வெளிநாட்டுக் கப்பலை சிறைபிடித்த ஈரான்

0 378

எரிபொருள் கடத்திச் சென்றதாகக் கூறி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றை ஈரான் பறிமுதல் செய்துள்ளது.

இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு கொடியுடன் வந்த ஸ்டெனா இம்பெரோ கப்பலை, கடந்த மாதத்தில் ஈரான் சிறைபிடித்தது. அந்தக் கப்பலையும், அதில் இருந்த 23 மாலுமிகளையும் ஈரான் இன்னும் விடுவிக்கவில்லை.

இந்த நிலையில், 7 லட்சம் லிட்டர் எரிபொருளை கடத்திச் சென்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை ஃபார்சி தீவு அருகே சிறைபிடித்ததாக ஈரான் கடற்படை கூறியுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த 7 மாலுமிகளும் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

நீதித்துறையில் உரிய அனுமதி பெற்றே சோதனை மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையிலேயே கப்பலை பறிமுதல் செய்துள்ளதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கப்பலானது தெற்கே உள்ள புஷெர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அது எந்த நாட்டின் கப்பல் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. எரிபொருள் கடத்தல் புகாரில் வெளிநாட்டுக் கப்பலை ஈரான் சிறைபிடிப்பது 30 நாட்களில் இது இரண்டாவது முறையாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments