அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்ற 50வது ஆண்டு தினம்

0 299

அமெரிக்காவின், அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்ற 50வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அதில் பயணித்த விண்வெளி வீரர்களின் உருவம் வெண்ணெயில் செய்து காட்சிப்படுத்தப்பட்டது.

ஓகியோ மாநிலம் கொலம்பஸ் நகரில் நடந்து வரும் கண்காட்சியில்,அமெரிக்காவின் பால் பண்ணை சங்கம் கலந்து கொண்டு, வெண்ணெயை கொண்டு, மெழுகு சிலைகளை போல் உருவங்களை வடிவமைத்துள்ளது.

அப்பலோ விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்ட 50வது ஆண்டு தினத்தையொட்டி, சுமார் ஆயிரம் கிலோ எடை வெண்ணையை வைத்து, நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங், அவருடன் பயணித்த விண்வெளி வீரர்கள் பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோரின் உருவம், அப்பலோ -11 விண்கலத்தின் லோகோ மற்றும் இரு பசுக்கள் ஆகியவற்றை செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை பலரும் கண்டு ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments