கேரளாவில் நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்

0 617

கேரளாவில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி கேரள போக்குவரத்து போலீசார் லட்டு வழங்கி வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் தற்போது போக்குவரத்து விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் கேரளத்தில் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி லட்டு வழங்கி விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இதனுடைய காட்சி அனைத்து வாட்ஸ்அப்களிலும் வைரலாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments