பள்ளிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்ப்பாடு

0 252

டெங்கு காய்ச்சலை தடுக்க 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்கள், மைதானங்களை தூய்மையாக பராமரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள தேவையற்ற செடிகள், முட்புதர்கள், தேங்கியிருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், எதனால் காய்ச்சல் ஏற்பட்டது? என்ன காய்ச்சல் என்று தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments