நீட் பயிற்சி தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும்

0 208

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், நீட் மற்றும் JEE போட்டித் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு, பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள, மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு நடைபெறும் என்றும், வினா மற்றும் விடைக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாள்களை திருத்தி, மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை குறுந்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments