பிரபல ரவுடி வெட்டிக்கொலை

0 645

புதுச்சேரி யூனியன் குறிஞ்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.

அப்பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கிய அவர் நேற்றிரவு குறிஞ்சி நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து கை, கழுத்து தலைப்பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த லாஸ்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments