போக்குக் காட்டிய குதிரையை போலீசார் மடக்கிப் பிடித்தனர்

0 224

உக்ரைன் நாட்டில் வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் சுற்றித் திரிந்த குள்ளக் குதிரை ஒன்றை போலீசார் ஓடி ஓடி பிடித்த சுவாரசியக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கிவ் நகரில் புஸியா என்று பெயரிடப்பட்டு வீட்டில் வளர்க்கப்பட்ட குள்ளக்குதிரை ஒன்று அங்கிருந்து தப்பி சாலைக்கு வந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் அங்கு வந்த போலீசார் அதனைப் பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரிடம் பிடிகொடுக்காமல் ஓட்டம் பிடித்தது புஸியா.

ஆனால் விடாப்பிடியாக விரட்டிச் சென்ற போலீசார், பூவைக் கொடுத்து குதிரையை மயக்கப்பார்த்தனர். இறுதியில் ஒரு வழியாக அதனை மடக்கிப் பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments