பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியது எப்படி

0 221

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியது எப்படி என்று சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி சாலையில் அந்தப் பெண் தமது உறவினர்களுடன் சென்றுக் கொண்டிருந்த காரும் சரக்குலாரியும் மோதியதில் பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அந்தப்பெண்ணும் அவர் வழக்கறிஞரும் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதுடன் உத்தரப்பிரதேசத்திற்கு வெளியே டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆயினும், விசாரணையை முடிப்பதற்காக அவகாசம் அளிக்கும்படி சிபிஐ கோரியதையடுத்து விபத்து தொடர்பான வழக்கை டெல்லிக்கு மாற்றும் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட 5 சிபிஐ அதிகாரிகள் லாரி வந்த திசை, அதன் வேகம், கார் வந்த பாதை அதன் வேகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். விபத்தின் காட்சி மறுபடியும் அங்கு ஒத்திகை பார்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments