மளிகை கடையில் வினோத திருடன் செய்த குரங்கு வேலை..!

0 1332

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளையன், பணம் இல்லாத கோபத்தில் வசனம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளான்.

மந்தாரகுப்பத்தில் ஜெயராஜ் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையின் மேற்கூரையை நேற்றிரவு பிரித்து உள்ளே புகுந்த கொள்ளையன், பணப்பெட்டியில் ரொக்கம் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என ஆர்வத்துடன் பார்த்துள்ளான்.

ஆனால் பணம் எதுவும் கிடைக்காததால் கொள்ளையனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதனால் கோபம் அடைந்த கொள்ளையன் உயிரை பணயம் வைத்து திருட வந்தா, காசு இல்லாம கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா, அதற்கு தான் இந்த குரங்கு வேலை என வசனம் ஒன்றை எழுது வைத்துவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளான். இது குறித்து விசாரணை நடத்தி வரும் மந்தாரகுப்பம் போலீசார் அந்த வினோத திருடனை வலைவீசு தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments