இந்திய - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

0 288

காஷ்மீர் தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் மட்டுமே நடைபெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டின் 2-வது நாளான இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்துப் பேசினார்.

அப்போது காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம் என்ற நிலையில் அதுகுறித்து பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மைக் பாம்பியோவிடம் தெரிவித்ததாக சந்திப்புக்குப் பிந்தைய டிவிட்டர் பதிவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments