பாலிவுட் நடிகர்கள் குறித்த MLAவின் பதிவுக்கு பலர் கண்டனம்

0 299

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த பார்டியில் கலந்து கொண்ட நடிகர்கள், தாங்கள் போதைபொருள் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என எம்எல்ஏ மன்ஜிந்தர் சிர்சா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வீடியோவை இயக்குநர் கரண் ஜோஹர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனை பகிர்ந்த டெல்லியை சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சி எம்எல்ஏ மன்ஜிந்தர் சிர்சா, அந்த நடிகர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் நடிகர்கள் அனைவரும், போதை பொருள் சோதனையை எடுத்துக்கொண்டு, தங்களை நிரூபிக்க வேண்டும் என்றும், அதுவரை தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் மன்ஜிந்தர் சிர்சா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments