பச்சிளம் குழந்தைகள் கடத்தி விற்கப்பட்ட வழக்கு - 4 பேருக்கு ஜாமீன்

0 495

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ததாக  கைதாகியுள்ள ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில், பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆடியோ ஒன்று வெளியானது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விருப்ப ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, நடந்த விசாரணையில் 30க்கு மேற்பட்ட குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் லீலா ஆகியோர் ஜாமீன் கேட்டு கடந்த 26ம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லதா, 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments