வேலூர் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

0 347

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 9ஆம் தேதி வாக்கு எண்ணப்படும் நிலையில், வாக்குகள் பதிவான பின்னர் இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments