விண்வெளியில் பிரத்யேக உடை அணியாவிட்டால் என்ன நடக்கும்?

0 2634

விண்வெளியில் தங்கும் வீரர்கள் அதற்கான பிரத்யேக உடை அணியாவிட்டால் வெடித்துச் சிதறி விடுவார்களா? என்ற கேள்விக்கு நாசா விடை கொடுத்துள்ளது.

விண்வெளி உடை அணியாவிட்டால் வீரர்கள் வெடித்துச் சிதறி விடுவர் என்று கூறப்படுவது உண்மை அல்ல என்று நாசா கூறியுள்ளது. ஆனால் பிரத்யேக உடை அணியாவிட்டால், வீரர்கள் உயிரிழப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது. அளவற்ற அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

விண்வெளியில், கடும் குளிர் மற்றும் கதிர்வீச்சுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள நாசா, அவற்றிடம் இருந்து வீரர்களைப் பாதுகாக்க பிரத்யேக உடை அவசியம் என்று தெரிவித்துள்ளது. வீரர்களுக்குத் தேவையான பிராண வாயு மற்றும் குடிநீர் விண்வெளி உடைக்குள் இருந்து கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும் நாசா விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments