தலைக்கு வந்த ஆபத்து, தலைக்கவசத்தோடு போன விவகாரம்..!

0 4697

சீனாவில் கனரக லாரி தலையில் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்தப்பிய நபரின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நிங்போ என்ற இடத்தில் சாலை வளைவில் பிற வாகனங்களைக் கவனிக்காத ஓட்டுநர் பிளைன்ட் ஸ்பாட் எனக் குறிப்பிடக்கூடிய தொலைவில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த வாகன ஓட்டியின் தலைமீது பின் சக்கரம் ஏறி இறங்கியது. ஆனால், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், உயிர் பிழைத்தார்.

கனரக லாரியில் சிக்கிய ஹெல்மெட் நசுங்கிப் போனது. இருப்பினும், தலையில் மென்திசுக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், மூளையிலும் ரத்தம் ஏதும் உறையவில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தும் இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments